"You are truly home only when you find your tribe." ______________ A free spirit with an exuberance for life. An unapologetic individualist who has blazed her own trail as an entrepreneur in media and communication over three decades. A lover of stories, visuals and words, cinema and travel, coffee and conversations, gardens and cooking pots, hers is a world of imagination, color, movement and stillness and embracing life in its lived fullness. More than anything, she is a believer of life, grace, wit, laughter, beauty and the triumph of the human spirit.
Make yourself a home here if it feels like tribe. It has been a long wait.
ஒரு ஒற்றைத் தாய் இரட்டை தாலாட்டு பாடுகிறாள்.
அவள் வலுவாக இருக்க வேண்டிய வீட்டின் தந்தையாக.
மென்மையாக இருக்க வேண்டிய வீட்டின் தாயாக.
அவளுடைய அச்சங்கள், அவள் குழந்தையின் அச்சங்கள் அல்ல.
நட்ட நடுஇரவிலே, தனியாக சிந்தும் கண்ணீர்,
அவளுக்கு மட்டுமே சொந்தம்.
அவள் தனக்கென எதுவும் நாடுவதில்லை.
இனி கனவுகள் காணுவதுமில்லை.
அவளுக்கென, எதிர்காலம் தான், என்னவாக இருக்கலாம் ?
அவள் அச்சங்களின் நிழல்கள், இரவு முழுவதும் துரத்துவன...
ஆனால் பகலில், உலகமோ ஏளனமாக கேட்கும்,
இது சரியா? எங்கிருந்து வந்தது இந்த தைரியம் உனக்கென!
இருள் சூழ சூழ,
மனமதில்கள் நெருங்க நெருங்க,
தன்னை நம்பி அருகுல் உறங்கும் குழந்தைக்காக,
கண் விழித்தபடி உறங்கும் ஒரு ஒற்றைத் தாய்,
இரட்டை தாலாட்டு பாடுகிறாள்.
ஆம், புதியதோர் தாலாட்டு பாடுகிறாள்.
- ஸ்ரீவித்யா ஸ்ரீனிவாசன்
2/3/2015
0 Comments Add a Comment?